Tuesday, July 3, 2012

உலக பொருளாதார பின்னடைவும் இலங்கைக்கான தாக்கங்களும்


உலகபொருளாதாரநிலை மீண்டும் மந்தகதியில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. 2008/09 காலப்பகுதியில் தோன்றிய நெருக்கடியின் அதிர்வலைகளிளிருந்து பொருளாதாரங்கள் மீளாதநிலையில் மீண்டும் நெருக்கடியின் பிடியில் உலகபொருளாதாரங்கள் சிக்கதொடங்கியுள்ளன. குறிப்பாக அமெரிக்கஐரோப்பியபொருளாதாரங்களில் கடும்தாக்கங்கள் உணரப்பட்டுள்ளன.

2008/09காலப்பகுதியில் உருவானபொருளாதாரநெருக்கடி100வருடங்களுக்கு மேல் இயங்கியichmanbrothersவங்கியின் முறிவில் ஆரம்பமாகி பலநூறு ஸ்திரமான அமெரிக்கவங்கிகளையும் ஆட்டம்காணவைத்தது நாம்அறிந்ததே ,அதன்சுவடுகள் அழியாதநிலையில் மீண்டும் பொருளாதாரமந்தம் உலகநாடுகளை பீடிக்கதொடங்கியிருப்பது அபாயசின்னமாகவே கருதப்படுகிறது. 


அமெரிக்கபொருளாதாரங்கள் இன்று(2012ல்) வேலையின்மைபிரச்சினையால் பெரிதும்பாதிக்கபட்டுள்ளது. தற்போது14 million அமெரிக்கர்கள் வேலையின்மையின் பிடியில்சிக்கயுள்ளனர் .இவர்களுக்கான செலவையும் அரசே மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை இதனை மேலும் தீவிரபடுத்தியுள்ளது. அத்துடன் அங்கு இயங்கிவரும் பிரபல பல்தேசியநிறுவனங்களான NOKIA , HYUNDAAI போன்றன போட்டியை வென்றெடுக்க ஊழியர்களின் அளவை குறைக்கதிட்டமிட்டுள்ளன. இது மேலும்50000 பேருக்கு வேலை இழப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கபடுகிறது. இப்பிரச்சினைகளைகளைவதற்கு அமெரிக்கநிறுவனங்களுக்கு 1.8 trillion  நிதிதேவைபடுகின்றது இதனை திரட்டுவதிலும் பிரச்சினைகள் காணபடுகின்றன. 

ஐரோப்பியபொருளாதரங்களில் பெரும் சிக்கல் நீடிப்பது  குறுங்கால நிதி தேவையிலாகும்.ஐரோப்பிய வங்கிகளின் இடர்முகாமைத்துவஆய்வுகளின் படி அவை கடன்வழங்குவதில்  தமக்குண்டான ஆர்வத்தைகுறைத்துள்ளன[less willing to credit].அத்துடன்கழகங்கள், நிதிசாரா நிறுவனங்கள் தமதுநிதியை முதலிட மறுக்கின்றன இவை 754 billion(GDP இன் அரைபகுதி) தமது இருப்புபணமாக பேணுகின்றன. இதனால் ஐரோப்பியநிறுவனங்கள் பங்குலாபங்களை வழங்க முடியாதநிலை தோன்றியுள்ளது. இது முதலீட்டாளர்களீன் அதிருப்திக்கும்,தொடர்ச்சியான முதலீடு வெளியேற்றத்துக்கும் வழி வகை செய்துள்ளது.அங்கத்துவ நாடுகளானfrance, Germany, Italy, Ireland போன்ற நாடுகள் எதிர்பார்த்த வளர்ச்சியை முற்பாதியில் எட்டமுடியாது போராடுகின்றன. நெகிழ்வற்ற கேள்வியை கொண்ட எண்ணை விலை அனைத்து நாடுகளையும் கட்டிபோட்டுள்ளது.

இத் தாக்கங்களே, இலங்கை பொருளாதாரத்தின் அன்மிய பின்னடைவுக்கு காரணகர்த்தாக்களாக உள்ளன. உணவு உற்பத்தி துறைக்கு தேவையான முதலீடு ஐரோப்பிய அமெரிக்க நெருக்கடியால் தடைப்பட்டிருப்பதனால் india இடமிருந்தான உணவு இறக்குமதி அதிகரித்தது. இது உணவு பொருள் விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்தது. எண்ணை விலை உயர்வும் உற்பத்தியாளர்களுக்கான போதுமான நிதி வசதி அழிக்காமையினாலும் ஏற்பட்ட தாக்கங்கள் வழங்கல் சங்கிலியில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளன (நிரம்பல் அதிர்வு).இவை நிரம்பல் பக்க பணவீக்கத்துக்கு பெரும்பங்காற்றியுள்ளன. இப் பணவீக்க நிலைமை இன்னும் 5 ஆண்டுகளுக்கு தணிக்கபட முடியாது என பொருளாதார புள்ளிவிபர ஆய்வுகள் வெளிபடுத்தி நிற்கின்றன.

இலங்கையில் அரச, தனியார் கொள்வனவு ஆற்றல்களும் வெகுவாக குறைவடைய தொடங்கியுள்ளன. தனியார் கொள்வனவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12.5% இல் இருந்து 8.8% ஆகவும் அரச கொள்வனவு 11% இல் இருந்து 7.3% ஆகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. இவை முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி முதலீடு உட்பாய்ச்சலை தடுக்க வழி செய்துள்ளது
துறைமுக விருத்தி உட்கட்டுமான சீராக்கல்கள் போன்றவற்றுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளும் பணவீக்க தாக்கங்களால் அவற்றில் தோன்றிய அதிகரிப்புகளும் சமூலமீதியையும்(budget deficit), நடைமுறை கண்க்கு மீதியையும் மேலும் பற்றாகுறை அடைய செய்துள்ளது. இவை தொடர்ச்சியான படுகடன் அதிகரிப்பிற்கும், வட்டி கொடுப்பனவு அதிகரிப்புக்கும் அங்குரார்ப்பணம் செய்துள்ளது.
இலங்கையின் ஏற்றுமதிகள் பெரும்பாலும் ஐரோப்பிய அமெரிக்க சந்தைகளை மையமாக கொண்டிருப்பதனால் தற்போதய மந்தநிலையால் இலங்கையின் பிரதான ஏற்றுமதிகளான தைத்தஆடைக்கான கேள்வி குறைவடைந்துள்ளது. இது ஏற்றுமதி வருமான குறைவுக்கும் உள்நாட்டு உற்பத்தியாளர் வெளியேற்றத்துக்கும் வழிகோலியுள்ளது.இவற்றுடன் சுற்றுலா துறையும் சரிவு நிலை நோக்கி அடியெடுத்துவைக்க ஆரம்பித்துள்ளது.
இவை உணரப்பட்டுவிட்ட தாக்கங்களே இன்னும் இது போன்ற சரிவுகளை உலக பொருளாதாரங்களும் இலங்கை பொருளாதாரமும் விரும்பியோ விரும்பாமலோ எதிர் நோக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன இது ஒரு தனி நாடு சார்ந்த பிரச்சினை அல்ல உலக பொருளாதாரங்கள் சரிவிலிருந்து மீளும் வரை இலங்கையின் சரிவும் தொடரும்……………….



தரவு மூலம்: financial management june 2012, central bank report 2011, internet datas