Thursday, November 24, 2011

மழைப்பாடம்...

செந்நிற கதிர்களுடன் சூரியன் கிழக்கு திசையை வர்ணமாக்குகிறான் பொழுது புலர்ந்ததை சேவல்கள் தம் மேல் ஸ்தாயி ஆலாபனைகள் மூலம் உறுதிபடுத்துகின்றன அதற்கு இசையுமால்  போல் மரங்கள் தளிர் தாளம் போடுகின்றன வழமையான சுறுசுறுப்புடன் மனிதர்களும் இயங்க ஆரம்பிகிறார்கள்

வானிலையில் சின்ன மாற்றம் வானத்தின் வண்ணத்தை கருமை சூழ்கிறது ஏகாந்தம் மயானத்துக்கே சவால் விடுமாப்போல் உள்ளது மரங்கள் மந்திரித்த சிலைகளாக நிக்கின்றன பறவைகள் முகாம் தேடி தஞ்சம் புகுகின்றன கருமேகம் மெல்ல மெல்லிசை இசைகிறது இடி அதை துள்ளிசையாக மாற்றுகிறது மின்னல்கள் வானின் மார்பை கிழித்து மழையின் வேகத்தை கூட்டுகின்றன மலை சோவென பொழிகின்றது 

இடி ஒலிகள் தொலை காட்சிகளுக்கும் ஓய்வு கொடுக்கின்றன மின்னல் அலைகள் தொலைபேசி அலைகளை தூர போட சொல்கின்றன கருமேகம் மின்சார விளக்கை ஏத்த வழிகோலுகிறது

வெள்ளம் தரை புரண்டு ஓடுகிறது குளிர்மை யாழ்ப்பாணத்தையும் மலை நாடாக்கி மகிழ்கிறது மரங்கள் அமைதியை குலைத்து ஆக்குரோசமாக ஆடுகிறான சாலைகள் வெறிச்சோடுகின்றன மனிதர்கள் வீடுகளுக்குள் முடங்குகிரார்கள் வேலைகள் கெடுகின்றன குடை இன்றி வந்தவர்கள் இடமின்றி தவிக்கின்றனர் கூட்டமாக விளையாடிய சிறுவர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர்

நானும் நினைப்பேன் இந்த வெயிலை தங்கமுடியாதுள்ளது என்று மழையையும் தாங்க முடியவில்லை தான்  
அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை 
இது தான் இன்றைய மழையில் நான் கண்ட அனுபவம்

Sunday, November 20, 2011

எங்கு செல்கிறது srilanka கிரிக்கெட் ...

உலககின்னத்தில் சிறப்பாக விளையாடி இறுதி போட்டி வரை தெரிவான அணிக்கு இன்று நடந்தது என்ன............
பாகிஸ்தான் அணியுடனான நேற்றைய ஒருநாள் போட்டியில் 76 பந்துகளில் 46 ஓட்டங்களைபெறவேண்டி இருந்த அணி  7 விக்கெட்களை வெறுமனே 19 ஓட்டங்களுக்கு இழந்தது தான் வேதனை

போட்டியை பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் தமது பங்கை சிறப்பாக வெளிபடுத்திய போதும் துடுப்பாட்டம் மோசமாக அமைந்தது தான் தோல்விக்கு காரணம் குறிப்பாக சங்கா மஹேல தவிர யாரும்
சோபிக்கவில்லை என்று தான் கூற முடியும்

 டில்ஷான் அணித்தலைவராகவும் சரி ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் சரி சொதப்பி வருகிறார் தரங்க ஆரம்பங்களை பெறுகிறார் ஆனால் தொடரமுடியாது தடுமாறுகிறார் சந்திமால் மத்தியூஸ் போன்ற இளம் வீரர்கள் போர்ம் இன்றி தவிக்கிறார்கள் திசர பெரேரா powerplay யில் மட்டும் ஓட்டம் பெறுகிறார்

இவ்வாறான நிலையினை தடுத்து நிறுத்துவது அனைத்து வீரர்களினதும் கடமை ஆகும் அனைவரும் அணியில் தமக்கான பங்கினை சிறப்பாக செய்ய வேண்டும் இல்லாவிடில் மற்றைய விளையாடுகளை போல் கிரிக்கெட்டிலும் இலங்கை பின்னோக்கி தள்ளப்படும் அதை தவிர்க்க இனி வரும் தொடர்களில் வீரர்கள் சிறப்பாக செயற்பாடுவார்கள் என நம்புகிறேன் இலங்கை ரசிகர்கள் அனைவரும் அதையே ௭திர்பார்கிரர்கள் ...

Friday, November 18, 2011

மனிதநேயம்

மனிதம் என்பது  மகோன்னதமான  ஒரு உணர்வு இந்த உலகத்தில் சுய சிந்தனை உள்ள ஒரே உயிர் மனிதன்.
ஆனால் இன்று மனித நேயத்துக்கு என்ன நடந்தது மதம் பிடித்த மனங்களின் ஓரத்தில் கூட அவை வாழ்கின்றதா? என்று தெரியவில்லை மனிதனை மனிதன் நேசிக்காவிட்டாலும் மற்ற உயிரும் உணர்வுள்ளது என்ற எண்ணம் கூட அழிந்து விட்டது தான் வேதனைக்குரியது

சுயநலம் எமது சமூகத்தின் சின்னமாகிவிட்டது அனைத்தையுமே தனக்காகிகொள்ளும் உணர்வு நம்மிடம்  ஊன்றி விட்டது ஆனால் இறக்கும் போது நெருப்பு தின்ன நமது உடல் மட்டுமே உண்டு என்பது மறந்து போய் விடுகிறோம் சமூகத்தின் உயர்வான பக்கங்களை பார்த்து பொறாமை படுகிறோம் ஆனால் துன்பத்தில் மறைந்த பக்கங்களை புரட்டாமலே  விட்டு விடுகின்றோம்

ஆலயங்களுக்கு ஆயிரக்கணக்கில் செலவிடுகிறோம் அநாதைகளை அப்படியே விட்டு விடுகிறோம் அன்னதானம் என்னும் பேரில் உறவுகளுக்கு விருந்தளிகிறோம் ஆனால் அரை வயிற்ருடன் வாழும் வறியவனை வாட்டுகின்றோம் அடுத்தவன் துன்பத்தில் இன்பம் காண்கிறோம் அதே துன்பம் எம்மை சூழும் போது மனம் உடைக்கிறோம்

எமது நேரத்தில் பலதை அடுத்தவனை பற்றி பேசி களிக்கிறோம் அவன் நம்மை பேசினால் போர் கொடி தூக்குகிறோம் புதுமை செய்பவனை புன்னாக்குகிறோம்  பழமை பேசுபவனை பைத்தியகாரன் ஆக்குகிறோம் உழைக்காதவனை வெட்டி என்கிறோம் அதிகமாக உழைபவனை நப்பி என்கிறோம்

இவ்வாறு இன்று மனித நேயம் சிதைவடைந்து செல்கிறது.... நிபந்தனையுடன் வாழும் இந்த உலகில்
இதை சொல்லும் நீ உயர்ந்தவனா என என்னை யாரும் கேட்க வேண்டாம் எனது மனித நேயமும் இதே நிலையில் தான் வாழ்கிறது என்பதையும் வாய் கூசாமல் ஒப்புகொள்கிறேன்....

Tuesday, November 15, 2011

யாரோடு நோவேன்

இன்று  அனைத்தும் கணணி மயமாக்கபட்டுள்ளது உலகம் இணையத்துக்கு பாத பூஜை செய்கிறது. கனவுகளும் கற்பனைகளும் இன்று கணணி திரைக்குள் அகப்பட்டு விட்டன.
youtube இன்று தாலட்டு பாடுகிறது.
 சிறுகுழந்தையும் இன்று chating செய்கிறது.  இளைஞர் காதல்கள் இன்று facebook கில் மலர்கின்றன signout செய்ய முன் அவை உதிரவும் செய்கின்றன

இத்தகைய ஒரு நவ நாகரிக மாற்றம் நமக்கு தந்ததும் பல பறித்ததும் பல......

நம் கலைகள் இன்று மலையேறி விட்டன கலாச்சாரங்கள் இன்று கற்பழிக்க படுகின்றன பக்தி பூர்வமாக நடக்க வேண்டிய பூஜைகள் திருவிழாக்கள் இன்று தெரு விழாக்களாக மாறி உள்ளன ஆலயங்கள் வெறிச்சோடி உள்ளன சினிமா அரங்குகளில் பக்த கூட்டம் அலை மோதுகிறது

விளையாட்டு மைதானங்கள் வெறுமனே வாடுகின்றன ஆகாய வெளி பட்டங்களுக்காக காத்திருக்கிறது. அண்ணன் அக்கா மாமன் மச்சான் என்று நடக்க வேண்டிய திருமணங்கள் முகூர்த்த நேரத்தில் முகம் காட்டும் உறவுகள் முன் நடக்கின்றன

கல்விக்கு முக்கியம் கொடுத்த சமூகம் இன்று வண்ணம் மாற்றி உள்ளது மாணவர்களுக்கு கல்வி ஒரு parttime job ஆக மாறியுள்ளது notes book கைவிட facebook முக்கியமாகி விட்டது 


இந்த நிலை தொடர வேண்டுமா? காலத்தின் மாற்றங்களை நான் எதிர்கவும் இல்லை மறுக்கவும் இல்லை ஆனால் அந்த மாற்றம் எம் கலை கலாச்சாரம் ஒற்றுமை விழுமியங்களை அளிக்காது பாதுகாக்க வேண்டியது நம் எல்லோரதும் பொறுப்பு என்பதை மட்டும் ஞாபகபடுதுகிறேன்

முதல் பூ ....

கற்பனைக்கு நான்
கருவுறவில்லை
கனவுகளுக்கு நான்
வண்ணமிடவில்லை
காலங்களுக்காக நான்
கலங்கவில்லை
கோலங்களை கண்டு நான்
கோவிக்கவில்லை   
புயல்கள் என்னை
புண்ணாக்கவில்லை
பூகம்பம் என்னை
மன்னாக்கவும் இல்லை
உதிரும் போதும்
உண்மைக்காக உதிர்வேன் ......