Friday, December 23, 2011

y this கொலைவெறி .....

இப்போது சின்னஞ்சிறிய குழந்தை கூட இசைக்கும் பாடல் y this கொலைவெறி  மூணு படத்தில் தனுஸ் பாடிய இந்த பாடல் தான் இப்போது ஹிட் ஆக ஓடி கொண்டிருகிறது இன்று எங்கு சென்றாலும் இந்த பாடலை பற்றி கதைகாதவர்களை அருமையாகத்தான் காண  முடிகிறது

ஆனால் இத்தகைய மாற்றத்தை ஒரு  தனுஸ் ரசிகனாக ஆதரித்தாலும் ஒரு கலை ரசிகனாக ௭திர்கிறேன்
ஆரம்பத்தில் இயக்குனர்கள் நடிகர்களாக மெல்ல மெல்ல கால் பதித்தார்கள் அது ஆரம்பத்தில் சற்றே சிறப்பாக இருந்தாலும் காலம் செல்ல செல்ல கேலிக்கூத்தாக உருப்பெற்றது நாம் அறிந்ததே சிறந்த உதாரணமாக சுந்தர்.c யை குறிப்பிடலாம் ஆரம்பத்தில் சாதாரணமாக தொடக்கி ஒரு action hero ஆக தன்னை காட்ட எண்ணி படம் என்ற பெயரில் நமீதா உடன் கும்மாளம் போட்டது அனைவரும் அறிந்ததே

இதே போல comadion hero   ஆன கதையும் அறிந்ததே ஒரு படம் hero ஆக நடித்தால் போதும் என நினைத்து புலிகேசி நடித்த வடிவேலு அதன் வெற்றியை தொடர்ந்து இந்திரலோகத்தில் நா அழகப்பன் நடித்து படுதோல்வி அடைந்ததும் அறிந்ததே

அதே போல ராஜேந்தரின் சீமந்த புதல்வன் சிம்பு பலதுறைகளில் தன்னை காட்டபோய் அத்தனை துறைகளையும் கழங்கபடுத்தியதும் ஊர் அறிந்ததே

நடிகர்கள் பாடகூடாது இயக்குனர் நடிக்க கூடாது என்று நான் குறிப்பிடவில்லை ஆனால் அதன் பாதிப்புகள் இன்னும் சிலகாலத்தில் இசை துறையை பெருமளவில் சிதறடிக்கும் என்றே பயபடுகிறேன்  TMS , பாலமுரளிகிருஷ்ணா, TL.மகாராயன் , யேசுதாஸ் , spb , ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன் , சுசிலா, ஸ்வர்ணலதா, சித்ரா, யானகி,சுஜாதா  என பல சாதனை பாடகர்களை உருவாகிய தமிழ் cenima விற்கு இன்று நடிகர்கள் தான் பாட  வேண்டும் என்ற அவசியம் என்ன?

இன்று கூட கார்த்திக், ஹரிசரண் , ஹரிஸ்ரகவேந்திரா, விஜயபிரகாஷ்,சின்மயி,சுசித்ரா   என பல வளர்ந்து வரும் திறமை மிக்க பாடகர்களுக்கு மத்தியில் தனுஸ் பாடவேண்டிய அவசியம் என்ன?


இந்த நிலை தொடந்தால் பாதிக்க படபோவது முழுக்க முழுக்க இசை துறையே இபோதே இலத்திரனியல் குரல் முறைகள் வந்து உண்மையான பாடகனை ஒதுக்க ஆரம்பித்து விட்டது இனி தங்கள் தங்கள் படத்தில் தாமே பாடுவது என சிம்பு தனுஸ் கூட்டணியில் மற்றவர்களும் இணைந்தால் பாடகனுக்கு வேலை இல்லாமல் போய்விடும் அதைவிட முக்கியமாக சங்கீதம் செத்துவிடும் பலபல சங்கதிகள் ஆலாபனைகள் என தவழ்ந்துவந்த சங்கீதம் இனி எட்டபோகும் நிலை என்ன?

நான் நடிகர்களை பாடவேண்டாம் என கூறவில்லை அதைவிட சங்கீத சுவைமிக்க பாடல்களை நல்ல பாடகர்கள் பாட இவர்கள் வழிவிட வேண்டும் என்றே கேட்டுகொள்கிறேன் ......

No comments:

Post a Comment