Tuesday, November 15, 2011

யாரோடு நோவேன்

இன்று  அனைத்தும் கணணி மயமாக்கபட்டுள்ளது உலகம் இணையத்துக்கு பாத பூஜை செய்கிறது. கனவுகளும் கற்பனைகளும் இன்று கணணி திரைக்குள் அகப்பட்டு விட்டன.
youtube இன்று தாலட்டு பாடுகிறது.
 சிறுகுழந்தையும் இன்று chating செய்கிறது.  இளைஞர் காதல்கள் இன்று facebook கில் மலர்கின்றன signout செய்ய முன் அவை உதிரவும் செய்கின்றன

இத்தகைய ஒரு நவ நாகரிக மாற்றம் நமக்கு தந்ததும் பல பறித்ததும் பல......

நம் கலைகள் இன்று மலையேறி விட்டன கலாச்சாரங்கள் இன்று கற்பழிக்க படுகின்றன பக்தி பூர்வமாக நடக்க வேண்டிய பூஜைகள் திருவிழாக்கள் இன்று தெரு விழாக்களாக மாறி உள்ளன ஆலயங்கள் வெறிச்சோடி உள்ளன சினிமா அரங்குகளில் பக்த கூட்டம் அலை மோதுகிறது

விளையாட்டு மைதானங்கள் வெறுமனே வாடுகின்றன ஆகாய வெளி பட்டங்களுக்காக காத்திருக்கிறது. அண்ணன் அக்கா மாமன் மச்சான் என்று நடக்க வேண்டிய திருமணங்கள் முகூர்த்த நேரத்தில் முகம் காட்டும் உறவுகள் முன் நடக்கின்றன

கல்விக்கு முக்கியம் கொடுத்த சமூகம் இன்று வண்ணம் மாற்றி உள்ளது மாணவர்களுக்கு கல்வி ஒரு parttime job ஆக மாறியுள்ளது notes book கைவிட facebook முக்கியமாகி விட்டது 


இந்த நிலை தொடர வேண்டுமா? காலத்தின் மாற்றங்களை நான் எதிர்கவும் இல்லை மறுக்கவும் இல்லை ஆனால் அந்த மாற்றம் எம் கலை கலாச்சாரம் ஒற்றுமை விழுமியங்களை அளிக்காது பாதுகாக்க வேண்டியது நம் எல்லோரதும் பொறுப்பு என்பதை மட்டும் ஞாபகபடுதுகிறேன்

2 comments:

  1. முதலில் வருக வருக,
    நானும் நினைத்ததுண்டு!
    என்ன செய்கிறோம் எதற்கு செய்கிறோம்?
    மாற்றம் ஒன்று மாற்றம் இல்லாதது,அனுசரிக்கவே வேண்டும்!

    ReplyDelete
  2. நானும் மறுக்கவில்லை மாற்றம் உலக நியதி
    ஆனாலும் அதன் பக்க விளைவுகளை குறைக்க வேண்டும்

    ReplyDelete