மனிதம் என்பது மகோன்னதமான ஒரு உணர்வு இந்த உலகத்தில் சுய சிந்தனை உள்ள ஒரே உயிர் மனிதன்.
ஆனால் இன்று மனித நேயத்துக்கு என்ன நடந்தது மதம் பிடித்த மனங்களின் ஓரத்தில் கூட அவை வாழ்கின்றதா? என்று தெரியவில்லை மனிதனை மனிதன் நேசிக்காவிட்டாலும் மற்ற உயிரும் உணர்வுள்ளது என்ற எண்ணம் கூட அழிந்து விட்டது தான் வேதனைக்குரியது
சுயநலம் எமது சமூகத்தின் சின்னமாகிவிட்டது அனைத்தையுமே தனக்காகிகொள்ளும் உணர்வு நம்மிடம் ஊன்றி விட்டது ஆனால் இறக்கும் போது நெருப்பு தின்ன நமது உடல் மட்டுமே உண்டு என்பது மறந்து போய் விடுகிறோம் சமூகத்தின் உயர்வான பக்கங்களை பார்த்து பொறாமை படுகிறோம் ஆனால் துன்பத்தில் மறைந்த பக்கங்களை புரட்டாமலே விட்டு விடுகின்றோம்
ஆலயங்களுக்கு ஆயிரக்கணக்கில் செலவிடுகிறோம் அநாதைகளை அப்படியே விட்டு விடுகிறோம் அன்னதானம் என்னும் பேரில் உறவுகளுக்கு விருந்தளிகிறோம் ஆனால் அரை வயிற்ருடன் வாழும் வறியவனை வாட்டுகின்றோம் அடுத்தவன் துன்பத்தில் இன்பம் காண்கிறோம் அதே துன்பம் எம்மை சூழும் போது மனம் உடைக்கிறோம்
எமது நேரத்தில் பலதை அடுத்தவனை பற்றி பேசி களிக்கிறோம் அவன் நம்மை பேசினால் போர் கொடி தூக்குகிறோம் புதுமை செய்பவனை புன்னாக்குகிறோம் பழமை பேசுபவனை பைத்தியகாரன் ஆக்குகிறோம் உழைக்காதவனை வெட்டி என்கிறோம் அதிகமாக உழைபவனை நப்பி என்கிறோம்
இவ்வாறு இன்று மனித நேயம் சிதைவடைந்து செல்கிறது.... நிபந்தனையுடன் வாழும் இந்த உலகில்
இதை சொல்லும் நீ உயர்ந்தவனா என என்னை யாரும் கேட்க வேண்டாம் எனது மனித நேயமும் இதே நிலையில் தான் வாழ்கிறது என்பதையும் வாய் கூசாமல் ஒப்புகொள்கிறேன்....
No comments:
Post a Comment