உலககின்னத்தில் சிறப்பாக விளையாடி இறுதி போட்டி வரை தெரிவான அணிக்கு இன்று நடந்தது என்ன............
பாகிஸ்தான் அணியுடனான நேற்றைய ஒருநாள் போட்டியில் 76 பந்துகளில் 46 ஓட்டங்களைபெறவேண்டி இருந்த அணி 7 விக்கெட்களை வெறுமனே 19 ஓட்டங்களுக்கு இழந்தது தான் வேதனை
போட்டியை பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் தமது பங்கை சிறப்பாக வெளிபடுத்திய போதும் துடுப்பாட்டம் மோசமாக அமைந்தது தான் தோல்விக்கு காரணம் குறிப்பாக சங்கா மஹேல தவிர யாரும்
சோபிக்கவில்லை என்று தான் கூற முடியும்
டில்ஷான் அணித்தலைவராகவும் சரி ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் சரி சொதப்பி வருகிறார் தரங்க ஆரம்பங்களை பெறுகிறார் ஆனால் தொடரமுடியாது தடுமாறுகிறார் சந்திமால் மத்தியூஸ் போன்ற இளம் வீரர்கள் போர்ம் இன்றி தவிக்கிறார்கள் திசர பெரேரா powerplay யில் மட்டும் ஓட்டம் பெறுகிறார்
இவ்வாறான நிலையினை தடுத்து நிறுத்துவது அனைத்து வீரர்களினதும் கடமை ஆகும் அனைவரும் அணியில் தமக்கான பங்கினை சிறப்பாக செய்ய வேண்டும் இல்லாவிடில் மற்றைய விளையாடுகளை போல் கிரிக்கெட்டிலும் இலங்கை பின்னோக்கி தள்ளப்படும் அதை தவிர்க்க இனி வரும் தொடர்களில் வீரர்கள் சிறப்பாக செயற்பாடுவார்கள் என நம்புகிறேன் இலங்கை ரசிகர்கள் அனைவரும் அதையே ௭திர்பார்கிரர்கள் ...
No comments:
Post a Comment